எந்நேரத்திலும் எந்நாளிலும், திருஅண்ணாமலையை கிரிவலம் வரலாம். அந்தந்த நாள் திதி, நட்சத்திரம், யோகம், கரணம், ஹோரை, லக்னங்களுக்கு ஏற்பக் கிரிவலம் பலன்கள் மாறுபடுகின்றன. ஒரே தரிசனத்தை ஒரு முறை பார்த்து மறுமுறை பார்த்த உடனேயே ஒரு வினாடி கால மாறுதலில்கூட அந்தத் தரிசனத்தின் பலனும் மாறி விடுகின்றது.
எனவேதான், இன்றைக்கும் நந்தீஸ்வரர் அருணாசல மஹாத்மியத்தை எடுத்துரைத்து வர ஸ்ரீஅகஸ்திய சித்த புருஷர் அவற்றைக் கிரந்த நாடிகளாக வடித்து வருகின்றார்.
பௌர்ணமியின் விசேஷம் :
பௌர்ணமி அன்றுதான் பகவான் சந்திர 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கின்றார். மதிகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரனே நம் மனதை ஆட்சி செய்கின்றார்.
உடல் தூய்மையும், மனத்தூய்மையுமே தெய்வீக நிலையில் மேம்பாட்டைத் தரும். மனமோ பலவித எண்ணங்களில் சுழன்று வருகின்றது. எண்ணங்களையும் கட்டுப்படுத்த இயலாது. மன ஓட்டங்களை ஒழுங்குபடுத்தினால்தான் மனோ சக்தியைப் பெறலாம். இதற்கு சந்திர பகவானின் அனுக்ரஹம் தேவை. இதைப் பெறுவதற்காகவே பௌர்ணமியில் கிரிவலம் வருகின்றோம்.
பௌர்ணமி திதி அன்று சூரிய பகவானின் தெய்வாம்சங்களில் பலவற்றை ஏற்றுத் தம்முடைய முழுமையான பதினாறு கலைகளுடன் சந்திரன் பிரகாசிக்கின்றார். அவருடைய அனுக்ரஹ சக்தி அவருடைய கிரணங்களின் மூலமாகவே நம் உடலிலும், சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் ஊடுருவுகின்றது.
பௌர்ணமி நிலவின் தெய்வீக சக்திகள் :
சந்திரனுடைய அனுக்ரஹ சக்திகள் அனைத்தையும் ஒருவர் பெற வேண்டுமானால் அவருடைய உடலும், உள்ளமும் புனிதமாக இருக்க வேண்டும். பௌர்ணமி அன்று 16 கலைகளுடன் சந்திரன் பிரகாசிப்பதால் அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தபோ பலனும், தெய்வ அனுக்ரஹமும் கைகூடும்.
ஆனால், அனைவராலும் இதைப் பெற முடியுமா? உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டுமே! இதற்கு சந்தியா வந்தனம், காயத்ரீ ஜபம், பிரம்ஹ யக்ஞம், சிவபூஜை போன்ற நித்ய கர்மானுஷ்டானங்கள், ஹோமம், பித்ரு பூஜை, குல தெய்வ பூஜை, இஷ்ட தெய்வ பூஜை, கோயில் தரிசனங்கள், தீர்த்த ஸ்நானங்கள், மகான்களின் தரிசனங்கள் போன்றவற்றை முறையாகச் செய்து வர வேண்டும்.ஆனால், கலியுலகில் இவற்றை முழுமையாக கடைப்பிடிக்க முடியுமா?
இதற்கு எளிய வழிமுறை உண்டா? ஆம்! உண்டு. அதுவே திருஅண்ணாமலை கிரிவலம் ஆகும்.
திருஅண்ணாமலையில் பித்ரு தர்ப்பணங்கள் செய்ய வேண்டிய கட்டங்கள் உண்டு. ஹோமம் வளர்க்க வேண்டிய இடங்களும் உண்டு.
இவற்றை முறையாக அந்தந்த இடங்களில் செய்து வந்திடில் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்யாமல் விட்ட பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணங்கள் போன்றவற்றிற்கு இவை பரிகாரங்களாக அமைகின்றன.
பௌர்ணமி நிலாக் கதிர்கள் :
பௌர்ணமி நிலவின் அற்புத சக்தி வாய்ந்த கிரணங்களின் தெய்வீக சக்தியை, ஒரு சாதாரண மனிதனால் எ ன் பெற இயலாது பதால் த ன் திருஅருணாசலேஸ்வரரே தன்னுடைய திருமேனியான மலையின் மீது சந்திரனின் அமிர்தக் கதிர்கள் அனைத்தையும் பெற்று அதை ஒவ்வொரு மனிதனுடைய தேக சக்திக்கு ஏற்றவாறு அளிக்கின்றார்.
திருஅண்ணாமலையில் விசேஷமான கற்கள், மூலிகைகள், விருக்ஷங்கள் உண்டு. இவை பல கர்ம வினைகளையும், நோய்களையும், தோஷங்களையும், பாவங்களையும் நீக்கும் சக்தி பெற்றவை. இவற்றில் சந்திரபகவானின் ஒளிக்கதிர்கள் பட்டுப் பிரதிபலிக்கும் போது அவற்றின் சக்தி பன்மடங்காகப் பெருகி கிரிவலம் வருபவர்களின் உடலில் ஊடுருவிப் பாய்கிறது.
இதற்காகவே பௌர்ணமி அன்று இயன்றவரை ஆண்கள், மேல்சட்டை இன்றி பஞ்சகச்ச முறையுடன் சாதாரண வேஷ்டியை அணிந்து கிரிவலம் வருதல் வேண்டும். இதனால் திருஅண்ணாமலையில் இருந்து பிரதிபலிக்கின்ற ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் திருவருள் கூடிய சந்திரக் கிரணங்கள் பெருமளவில் நேரடியாக தேகத்தில் பாயும். இதன் சக்தியால் ஒவ்வொரு மனிதனும்,
1️⃣ எத்தனையோ கோடி கர்ம வினைகளைக் கழிக்கும் நல்வழியைப் பெறுகின்றான்.
2️⃣ பாலாரிஷ்டம், கண்ணேறு, திருஷ்டி, பில்லி, சூன்யம், கழிப்பு மிதித்தல், காத்து கறுப்பு துஷ்ட வேலைகள் போன்ற சூன்யங்களில் இருந்து காப்பாற்றப் படுகின்றான்.
3️⃣ ஒவ்வொரு மனிதனும் முறையான ஒரு கிரிவலத்தில் குறைந்தது ஒரு மாதத்திற்குத் தேவையான புண்ணிய சக்தியை எளிதில் பெற்று விடுகின்றான்.
4️⃣ திருஅண்ணாமலையில் செய்யப்படும் தான தர்மங்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் உண்டு. அதிலும் பௌர்ணமி அன்று செய்கின்ற தான, தர்மங்களுக்கு ஆயிரம் மடங்கிற்கும் மேன்மையான பலன்கள் உண்டு. இவ்வாறு அபரிமிதமான புண்ணிய சக்தியைத் திரட்டித் தருவதே பௌர்ணமி கிரிவலம் ஆகும்.
5️⃣ பௌர்ணமியில் மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகிகள், தேவதைகள், தேவ, தெய்வ மூர்த்திகளும் கலியுக மக்களின் நலனுக்காக கிரிவலம் வருவதால் தெய்வ சங்கல்பமாக அவர்கள் தங்களுடைய கிரிவலத்தின் புண்ணியங்களை / தெய்வ சக்திகளை அன்றைய தினம் கிரிவலம் வருபவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். எனவே, சாதாரணமாக கிரிவலம் வருபவர்க்குக்கூட இத்தகைய அரிய அனுக்கிரஹம் ஒரு பங்காக வந்து சேருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக