ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

History


Thiruvannmalai  Arulmigu Arunachaleswarar Temple History
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தல வரலாறு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்


மூலவர்:அண்ணாமலையார்,அருணாச்சலேசுவரர்.

அம்மன்/தாயார் : அபித குஜாம்பாள்,  உண்ணாமுலையாள்.

தல விருட்சம்       : மகிழமரம்.

தீர்த்தம்                 : பிரம்மதீர்த்தம், சிவகங்கை.

ஆகமம்/பூஜை     : காரண, காமீகம்.

பழமை                  : 2000 வருடங்களுக்கு முன்







திருவண்ணாமலை தல வரலாறு:


விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது.

சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.

ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது.

இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார்.

அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.
பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.

பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது.

இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.


நான்கு முகத்துடன் லிங்கம்:

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பாதாள லிங்கம்:

மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது.

புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.

பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்' இருக்கிறது.

கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

அருணகிரி யோகீசர்: அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணித்தான்.

அதன்படி தனது பூதவுடலை இக்கோயில் கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்து விட்டான்.

எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தாள். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார்.

"கிளி கோபுரம்' என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை "அருணகிரி யோகேசர்' என்கிறார்கள்.

விநாயகரின் முதல்படைவீடு: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது.

இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.
இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

அருணைநாயகி திருவண்ணாமலையில் வாசம் செய்ய வந்த கதை இது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர்மேல் சம்பந்தாண்டான் என்னும் மந்திரவாதி வஞ்சம் கொண்டிருந்தான்.

ஆறுமுகனின் அருளுக்குப் பாத்திரமான அருணகிரிநாதர், முருக தரிசனம் பெற்று வீடுபேறு அடையக்கூடாதென்பதில் குறியாய் இருந்தான் அவன்.

அவன் வழிபட்டுவந்த காளிதேவிதான் அருணை நாயகி. தன் பக்தனின் வேண்டுதலையேற்று, முருகனைத் தன் மடியிலிருத்தி எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டாள் அன்னை.
இதைத் தன் ஞானக்கண்ணால் அறிந்த அருணகிரிநாதர், அன்னையை வசப்படுத்த பாடல்களைப் பாடினார். பாடல்களில் அம்பிகை மெய்ம்மறந்திருக்கையில், மடியிறங்கி வந்த முருகன் அருணகிரிநாதருக்கு கம்பத்தில் காட்சி தந்தார்.

இதனால் கோபமடைந்த சம்பந்தாண்டான் அன்னையை நிந்தித்தான். அதுமுதற்கொண்டு சம்பந்தாண்டனின் வழிபாடுகளை ஏற்காமல் திருவண்ணாமலையிலேயே எழுந்தருளி விட்டாள் அருணைநாயகி.

திருவண்ணாமலை கொசமடத் தெருவில் அன்னையின் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில் என்றாலும், எழிலுருவுடன் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை நாயகி!

அண்ணாமலை பெயர்க் காரணம்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.

பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.











மலை :


கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.

ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு.

இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலை கிரிவலம் என்பது புகழ் பெற்றது.

இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.

உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம்.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

இம்மலைக்கு காந்த சக்தி இருப்பதாக (காந்த மலை)புவியியல் வல்லுனர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது.




கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும்.

 1.இந்திர லிங்கம்
 2.அக்னி லிங்கம் 
 3. எமலிங்கம்
 4. நிருதி லிங்கம்
 5. வருண லிங்கம்
 6. வாயுலிங்கம் 
 7.குபேர லிங்கம்
 8. ஈசான லிங்கம்

 ஆகியவற்றை வணங்கி செல்ல வேண்டும்.

மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடதுபக்கமாகவே செல்லவேண்டும்.நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்களாம்.

அவர்கள் தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்களாம்.பேசிக்கொண்டு செல்லக்கூடாது.

இறைவனை நினைத்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடியே நடக்க வேண்டும்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மலையைப்பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும்.

வணங்கி விட்டு வேறு திசை பார்க்காது வானத்து நிலவை ஒருதரம் பார்த்தல் அவசியம்.

இம்மலையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செய்கின்றனர்.

கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோயில் இது.

இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.

142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில்.

கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.


பிரார்த்தனை

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார்.

கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம். மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மன அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.

1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்   திருக்கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்
கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.

இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள், நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும், பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.

இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, யார்-யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.

6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது.

9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள்தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள்.

அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான்.

1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி, வாரி வழங்கினார்கள்.

14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராய ருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக, மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான்.

அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.






1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு, சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது.

கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் அலை, அலையாக வர உதவி செய்தது.

14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும், சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை வியந்து, வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கு இந்த இரு மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான்.

திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.

அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன், தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.






திருவண்ணாமலை மன்னருக்கு  ஈசன் மகனாக பிறந்த வரலாறு.

அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.

உலகத்துக்கே படியளப்பவர் சிவபெருமான். அவர் காலடி நிழலில் இளைப்பாறத்தான். ஆன்மீகத்தில் பக்குவப்பட்டவர்கள் ஆணவம், அகந்தையை விட்டு, விட்டு அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் அம்மையும், அப்பனுமாகத் திகழும் ஈசன், மன்னர் ஒருவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த அதிசயம் திருவண்ணாமலையில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 

பரம்பொருள் ஈசனால் தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈடு, இணையற்ற அந்த சிறப்பைப் பெற்ற பெருமைக்குரியவர் வீர வல்லாள மகாராஜா. யாகஅக்னி வம்சத்தில் உதித்த அவர் வட தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்தார். 
ஹோய்சாளப் பேரரசின் கடைசி மன்னரான அவர் தற்போது கர்நாடகாவில் உள்ள ஹளபேடு நகரை முதல் தலைநகரமாகவும், திருவண்ணாமலையை இரண்டாம் தலை நகரமாகவும் கொண்டு 1291-ம் ஆண்டு தொடங்கி 1343-ம் ஆண்டு வரை 52 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வீர வல்லாள மகாராஜா மிகச் சிறந்த சிவபக்தன். தினமும் ஈசனுக்கு பூஜை செய்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அண்ணாமலையார் மீது அவருக்கு அதிக பக்தி இருந்தது. இதனால் திருவண்ணாமலை ஆலயத்தில் அவர் செய்த திருப்பணிகள் ஏராளம். 

5-ம் பிரகாரத்துக்கும் 4-ம் பிரகாரத்துக்கும் இடையே உள்ள கோபுரத்தைக் கட்டியது அவர்தான். 1328- ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட அந்த கோபுரம் 1331-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அவர் நினைவாக அந்த கோபுரம் வல்லாள மகாராஜா கோபுரம் என்றழைக்கப்படுகிறது. அந்த கோபுரத்தைக் கட்டி முடித்த போது அவருக்குள் கர்வம் தலை தூக்கியது. ‘‘எவ்வளவு அழகான பெரிய கோபுரத்தைக் கட்டி இருக்கிறேன்’’ என்று தற்பெருமைக் கொண்டார். 

இதைப் பார்த்த ஈசன், அவருக்கு அறிவுச்சூடு போட முடிவு செய்தார். அந்த கோபுர வாசல் வழியாக திருவீதி உலாவுக்கு வர மறுத்து விட்டார். திருவிழாவின் 10-வது நாள்தான் வல்லாள மகாராஜாவுக்கு தன் தவறு புரிந்தது. உடனே அண்ணாமலையார் முன்பு விழுந்து, வணங்கி மன்னிப்பு கேட்டார். அதன் பிறகே அண்ணாமலையார் 10-வது திருவிழா அன்று மட்டும் அந்த கோபுர வாசல் வழியாக வந்தார். இன்றும் அந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 







அண்ணாமலையார் அருளால், வல்லாள மகாராஜாவின் ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சியாக நடந்தது. இயற்கை வளங்களை நேர்த்தியாக பயன்படுத்தியதால் அவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தனர். எல்லா செல்வங்களும் அவர் காலடியில் கொட்டி கிடந்தன. என்ன இருந்து, என்ன பயன்? கொஞ்சி மகிழவும், நாட்டை வழி நடத்தவும் அவருக்கு வாரிசு இல்லை. குழந்தை இல்லாத ஏக்கம் அவரை மிகவும் தவிக்க வைத்தது. 

குழந்தைப் பேறுக்காகவே அவர் 2-வதாக சல்லமா தேவி என்ற பெண்ணை மணந்தார். அவளாலும் வல்லாள மகாராஜாவின் வாட்டத்தைப் போக்க இயலவில்லை. அண்ணாமலையாரிடம் கண்ணீர் விட்டு அடிக்கடி தன் தவிப்பை வெளிப்படுத்துவார். வல்லாள மகாராஜாவின் இந்த துயரத்தைப் போக்க அண்ணாமலையார் அருமையான ஒரு திருவிளையாடலை நடத்தினார். துறவி கோலம் பூண்டு அரசவைக்கு வந்து வல்லாள மகாராஜாவை சந்தித்தார். 

தன்னை நாடி வரும் சிவனடியார்களை வரவேற்று நன்கு உபசரித்து அனுப்புவது வல்லாள மகாராஜாவின் வழக்கமாகும். சிவனடியார்கள் எது கேட்டாலும், மறுக்காமல் செய்து கொடுப்பார். துறவிக் கோலத்தில் வந்திருந்த ஈசனைக் கண்டதும் அவரது மனம் பரவசம் அடைந்தது. வரவேற்று உபசரித்தார். பிறகு, ‘‘சுவாமி தங்களுக்கு அடியேன் என்ன உதவி செய்யட்டும்?’’ என்று கேட்டார். 

இந்த கேள்வியை எதிர் பார்த்துதானே ஈசன் வந்திருந்தார். துறவிக் கோலத்தில் இருந்த அவர், ‘‘என்னுடன் இன்று ஒரு நாள் மட்டும் தாம்பத்திய உறவுக்கு ஒரு பெண் வேண்டும்’’ என்றார். இதைக் கேட்டதும் வல்லாள மகாராஜாவுக்கும், அரசவையில் இருந்தவர்களுக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. என்றாலும் கேட்பவர் சிவனடியார் அல்லவா? அவரது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய வல்லாள மகாராஜா உத்தரவிட்டார். 

படை வீரர்கள் திருவண்ணாமலையில் தாசிப் பெண்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று அழைத்தனர். ஆனால் எந்த ஒரு தாசியும் கிடைக்கவில்லை. 
எல்லா தாசிப் பெண்களும் ஒவ்வொரு ஆடவருடன் இருந்தனர். இதுவும் சிவபெருமானின் திட்டப்படி நடந்ததாகும். தாசிப்பெண் கிடைக்காததால் படை வீரர்கள் வெறும் கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்கள். 

இதையடுத்து தாசிப் பெண்ணை அழைத்து வர வல்லாள மகாராஜாவே புறப்பட்டு சென்றார். பொன், பொருள் உள்பட என்ன கேட்டாலும் அள்ளி, அள்ளித்தர தயாராக இருப்பதாக சொல்லியும் ஒரு தாசி கூட கிடைக்கவில்லை. மன்னர் கவலையோடு அரண்மனை திரும்பினார். அவரது மனவாட்டத்தை கண்ட இளையராணி சல்லமா தேவி, அந்த சிவனடியாரின் விருப்பத்தை தான் பூர்த்தி செய்து உதவுவதாக கூறினாள். 

சிவனடியார் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்தாள். துறவியை வணங்கி, ‘‘சுவாமி என் கணவர் உமக்கு அளித்த வாக்குறுதி ஒரு போதும் தவறாது. அருணாசலமே நீயே துணை’’ என்றபடி சிவனடியாரை தொட்டாள். அடுத்த வினாடி துறவி வேடத்தில் இருந்த அண்ணாமலையார் ஒரு அழகான குழந்தையாக மாறினார். இதைக் கண்டு சல்லமா தேவி பிரமித்தாள். அந்த குழந்தையை வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள். 


இதனால் வல்லாள மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த அதிசயம் நிகழ்ந்த சில ஆண்டுகளில் கோவில்களையெல்லாம்இடித்து ஹிந்து தர்மத்தை அழிக்க  டெல்லி  இஸ்லாமிய  சுல்தான் படை படையெடுத்து வந்தது. சுல்தானின் படைகளுக்கும் வீர வல்லாள மகாராஜாவுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டிருந்த வல்லாள மகாராஜா படை முன்பு  சுல்தானால் தாக்குபிடிக்க முடியவில்லை. பள்ளி கொண்டாபட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்த போது வல்லாள மகாராஜாவை சுல்தான் நயவஞ்சகமாக ஏமாற்றி கொன்றான். 

வல்லாள மகாராஜாவின் இறுதிச் சடங்குகளை பள்ளி கொண்டாபட்டு அருகே ஓடும் கவுதம நதிக்கரையில் அண்ணாமலையார் செய்து முடித்தார்.
அன்று தொடங்கி இன்று வரை அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார். 
அன்றைய தினம் காலை அண்ணாமலையார், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கவுதம நதிக்கரைக்கு வருவார். அங்கு திதி கொடுப்பார். 

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். 

இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு ‘‘சம்மந்தனூர்’’ என்ற பெயர் ஏற்பட்டது. 

வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுத்து முடிந்ததும், சம்மந்தி முறையில் உள்ளவர்கள் எல்லாரும் வாங்கப்பா... என்று அழைப்பார்கள். அதற்கு சம்மந்தனூர்காரர்கள், ‘‘மாப்பிள்ளையை (அண்ணாமலையாரை) கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு சொல்வார்களாம்.
இப்படி பலவிதமான சடங்குகளுடன் அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு வழி நெடுக மண்டக பூஜைகளை ஏற்றுக் கொண்டு அண்ணாமலையார் ஆலயத்துக்கு திரும்புவார். 

அரசன் இறந்து விட்டால், அவனது மகனைத்தானே அடுத்த மன்னனாக முடிசூட்டுவார்கள். அந்த மரபின்படி மறுநாள்  அண்ணாமலையாருக்கு அரசராக முடிசூட்டும் விழா ஆலயத்தில் நடைபெறும். இதன் மூலம் அண்ணாமலையார் ஆண்டவனாகவும், அரசனாகவும் இருந்து தங்களை காப்பதாக திருவண்ணாமலை சுற்று வட்டாரப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி (தர்ப்பணம்) கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வல்லாள மகாராஜா மிக, மிக கொடுத்து வைத்தவர். அவரது சேவையைப் போற்றும் வகையில் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் அவர் உருவச்சிலை உள்ளது. அதோடு கோபுரத்திலும் சிலை வடித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது. 

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் ராஜகோபுரத்தை கடந்து சென்றதும் வரும் வல்லாள மகாராஜன் கோபுரத்தை பார்க்கும் போதெல்லாம், இந்த அதிசயம்தான் ஆன்மிகவாதிகளுக்கு நினைவுக்கு வரும். வல்லாள மகாராஜன் கோபுரம் போன்று, அந்த ஆலயத்தின் ஒவ்வொரு அமைப்புமே அதிசயம்தான். தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் 142 தனி தனி சன்னதிகள் இருக்கின்றன. இதுவும் திருவண்ணாமலை ஆலயத்தின் அதிசயங்களில் ஒன்றாகும். படத்தில் கோபுரத்தில் உள்ள வல்லாள மகாராஜா சிலை.







Singers:

The temple is praised in the Thevaram hymns of Gnanasambandar.

Describing the graceful appearance of the Lord with Mother on the Annamalai Hills with its water falls pleasing the souls, the Saint says that all adverse effects following a soul from past births would disappear once the devotee worships Lord Annamalaiar.

This is the 22nd temple in Nadu Naadu region sung in Thevaram hymns.

Thiruvannamalai Temple Festival:

10 day Karthikai Brahmmotsavam and Karthikai Deepam in November-December, Masi Maha Shivarathri in February-March, Thai Mattu Pongal, Tiruvudal and Oonjal utsav falling almost on January 15 and monthly Brahmmotsavam are devotionally celebrated in the temple.

Fire walking is observed on Aadi Pooram day in July-August a ceremony not followed in any Shiva temple. Six time Puja (Aaru Kala Puja) is strictly followed in this temple as per Agama rules.

On Masi Magam day in February-March, Lord Annamalaiar visits a place called Palli Pattu for Theerthavari, an event that represents Lord’s performing the last rites for Vallala Maharaja to whom He was born a son earlier.

Lord visits the temples in the surroundings on the 5th day of Thai month covering January-February and grants darshan to devotees at Kalasapakkam on the Rathasapthami day. It is on this day the Car (rath) of Sun turns northward marking the beginning of Utharayana period covering six months from January-February to June-July. The 6 day wedding festival takes place on Panguni Uthiram in March-April. Almost every day in the month is a festival day in the temple. Pradosha – 13th day of new moon or full moon is devotionally observed in the temple. Special pujas are performed on Deepavali, Pongal and Tamil and English New Year days.


2 கருத்துகள்: