ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

புதன், 4 மே, 2022

அருள்மிகு அருணாசலேஸ்வரரை குளிர்விக்க தாராபிஷேகம் துவக்கம் !


இற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 

அருள்மிகு அருணாசலேஸ்வரரை குளிர்விக்க தாராபிஷேகம் துவக்கம் 
அக்னி நட்சத்திரம் இன்று துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேர் அண்ணாமலையார் கோவில், மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது. (தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.) இதில் ஏராளமான பக்தர்களக் தரிசனம் செய்தனர்.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி, வரும் 28வரை உள்ளது. இக்காலத்தில், வெப்பம் கடுமையாக இருக்கும். 

சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான மாலை, 6:00 மணி வரை தாராபிஷேகம் நடக்கும். 

இதில், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை பொருட்களை, பன்னீரோடு கலந்து, தாரா பாத்திரத்தில் போட்டு, அதை, மூலவர் லிங்கத்தின் மீது, சொட்டு சொட்டாக விழும்படி, தாராபிஷேகம் நடக்கும். 

அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக நடத்தப்படும் தாராபிஷேகம், அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தொடங்கிது. ஏராளமானோர் தரிசனம் செய்தன

#ௐ_நமசிவாய_சிவாய_நம 

➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக