ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

திங்கள், 14 பிப்ரவரி, 2022

Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai


"அண்ணாமலையார் S/O வல்லாள மகாராஜா"...''மாசி மகம்''&''வல்லாள
மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுத்தல்'':17-2-2022"திருஅண்ணாமலை உண்ணாமுலை
அம்மன் உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில்".அண்ணுதல்- நெருங்குதல்; அண்ணா-
நெருங்க முடியாதது என்று
பொருள்.திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத மலை
என்பதால் அண்ணாமலை.அண்ணாமலை, கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா
யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும்,கலி
யுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மேருவாகவும், பாமர மக்களுக்கு கல்
மலையாகவும் காட்சி தருகிறது. ‘கடலில் மறைந்து போனதாகக்
கருதப்படும்,லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை’ என்று
ஸ்ரீரமண
மகரிஷியிடம் ஆசிபெற்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் பால்
பிரண்டன்,ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்.1949-ஆம் ஆண்டு ஜனவரியில்
இந்திய அறிவியல் கழகக் கூட்டம் நடந்தபோது,‘இமய மலையைவிட திருவண்ணாமலை
பழைமையானது’ என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் டாக்டர் பீர்பால் சகானி
என்ற புவியியல் அறிஞர்.பிரம்மா. விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற
வாக்குவாதம் எழுந்தது. அப்போது அங்கு வந்த சிவன், அவர்களுக்கு ஒரு போட்டி
வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்திற்கும் பூமிக்குமாக உயர இருப்பதாகக்
கூறினார்.தனது அடி, முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே
பெரியவர்கள் என்றார். இந்தப் போட்டிக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர். ஜோதி
ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கிப் பயணித்தார்
பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்றார் விஷ்ணு
இருவராலும் அக்னி ஜோதியாய் நின்ற ஈசனின் அடி முடியை காண
முடியவில்லை.அடி,முடி காண முடியாத ஜோதி ரூபமாய் சிவன் விஸ்வரூபம் எடுத்து
நின்ற தலம் திருவண்ணாமலை. நாள் சிவராத்திரி.அக்னி ரூபம் எடுத்த சிவனே
இங்கு
அண்ணாமலையாக வீற்றிருக்கிறார்.ஆம்!இங்கு மலையே சிவம்.எனவே மஹா
சிவராத்திரி நன்னாளில் தான் திருவண்ணாமலை உருவானது.அக்னி மலையாய் நின்ற
ஈசனை விஷ்ணுவும்,ப்ரம்மாவும் ''யாரும் அண்டமுடியாத அண்ணலாகிய தாங்கள்
எங்கள் பொருட்டு இங்கு அக்னிமலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள்.இந்த
அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை
தான்.உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால்தான்
முடியும்.உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும்.உமக்கு
ஆரத்தி எடுக்க சூர்ய,சந்திரர்களால் தான் முடியும்.எனவே கலியில் மக்களும்
உம்மை தீப,தூபஅர்ச்சனை,அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய
வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க
வேண்டும்''என்றனர்.ப்ரியமுடன்:கட்டுரையாக்கம்:அன்பன்.குமரி.சிவ.அ.விஜய்
பெரியசுவாமி,கல்பாக்கம்.உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம்
ஒன்று வெளிப்பட்டது.அந்த சிவலிங்கமே இன்று நாம் ஆலயத்தில் வழிபடும்
அருணாச்சலேஸ்வரர்..உடனே தேவ தச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான்.பின்னாளில்
பற்பல மன்னர்களால் திருப்பணி
செய்யப்பட்டு இன்று  ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும்
பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது  அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்.ஆனால்
அந்த கைலைநாதன் திருஅண்ணாமலையாகவே மலையாகவே உள்ளார் என்பதே சித்தர்கள்
கூற்று..அவரே லிங்கோத்பவர்.அந்த லிங்கோத்பவ லிங்கமே
நம் திருவண்ணாமலை.ஆம்!மலையே சிவம்...மகாசிவராத்திரி நன்னாளில்
தோன்றி,அக்னி மலையாய் இருக்கும் ஈசனை,அந்த மகாசிவராத்திரி நன்னாளில்
கிரிவலம் வந்து பெரும் புண்ணியம் பெற்று,நம் வாழ்வில் கவலைகள்
களைவோம்.திருவண்ணாமலையைத் தலை நகராகக் கொண்டு, மன்னன் வல்லாளன் ஆட்சி
புரிந்து வந்தான்.அவனுக்கு இரு மனைவியர் என்றாலும், பிள்ளைப் பேறில்லாமல்
மனம் வருத்தமுற்றான். சிறந்த
சிவபக்தனாகிய வல்லாளனைச் சோதிக்க விரும்பிய அருணாசலேஸ்வரர், துறவி வடிவம்
கொண்டு அவனது அரண்மனைக்கு வந்தார். தேவைகளைக் கூறும்படி கேட்டான்மன்னன்
.அவர்  தாம் சுகித்திருக்க பெண்களை அனுப்பும்படி கேட்டார். மன்னன் அனுப்ப
கணிகைகளை அழைத்தபோது, அவர்கள் வர மறுத்தனர். ஏனெனில், முன்னதாகவே
சிவபெருமான் அவர்களுக்குப் போதுமான பொன் கொடுத்திருந்தார். விருப்பத்தைப்
பூர்த்தி செய்ய முடியவில்லையே என மனம் வருந்திய மன்னன், அவனுடைய மனைவி
சல்லமா தேவியை அவளது விருப்பத்துடன் அனுப்பி வைத்தான். சல்லமா தேவி துறவி
தங்கியிருந்த இடத்திற்குச் சென்று, உறங்கிக் கொண்டிருக்கும் துறவியைத்
தொட்டாள். உடனே துறவி மறைய, அந்த இடத்தில் பச்சிளங் குழந்தை காணப்பட்டது.
அதைக் கண்டு மகிழ்ந்த ராணி,குழந்தையை எடுத்துச் சென்று மன்னனிடம்
கொடுத்தாள்.அடுத்த கணமே குழந்தை மாயமாய் மறைந்துவிட்டது. திகைத்து நின்ற
மன்னன் எதிரில் ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் தோன்றி, தானே
குழந்தையாய்க் காட்சி தந்ததாகக் கூறினார்."நான் குழந்தையாக உம்மிடத்தில்
வந்ததால் உன் காலத்திற்குப்பின் உமக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை
நானே செய்கிறேன்'' என்று அருளினார்.இறைவன் மன்னனுக்கு வாக்களித்தபடியே
ஆண்டு தோறும் மாசி மகநாளில் வல்லாள மகாராஜா வுக்கு ஈமச்சடங்கு
செய்வதற்காக அண்ணாமலையார்  திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று
வருகிறது.ரமண மஹிரிஷியின் பக்தர் ஒருவர் ஒருமுறை ரமணரிடம்,''சுவாமி
நாங்கள் திருக்கைலாய யாத்திரை செல்ல உள்ளோம்.தாங்களும் எங்களுடன் வந்தால்
மிக்க உவகை அடைவோம்''என்றனர்.உடனே ரமணர் அவர்களிடம்,''நீங்கள் எதற்கு
திருக்கயிலாயம் செல்கிறீர்கள்?!''என வினவ,''சுவாமி ,அங்கு தானே நம்
சிவபெருமானின் இருப்பிடம் உள்ளதாக சொல்கிறார்கள்''என்றனர்.இதனை
எதிர்பார்த்த ரமண மகிரிஷி,''அடியவர்களே!சிவபெருமானின் இருப்பிடம் உங்கள்
போன்ற தூய்மையான உள்ளம் கொண்ட அடியவர்களின் மனது
மட்டுமே.அதுமட்டுமல்ல,உங்களுக்காக ஈசன் இங்கு திருவண்ணாமலையில்
அண்ணாமலையாகவே உள்ளார்.எனவே சிவபெருமானே திருவண்ணாமலையில் நம் பொருட்டு
மலையாக இருக்கும் பொது திருக்கயிலைமலைக்கு எதற்கு சொல்ல வேண்டும்''என
கூறி,''சுயம்புலிங்கமாக அருளும் அண்ணாமலையை சிவராத்திரி,பௌர்ணமி மற்றும்
எந்த நாளிலும் ,எந்த நொடியிலும்  கிரிவலம் வந்து ஈசன் அடி பற்றி
வாழ்வாங்கு வாழலாம்''என அருளி ஆசி வழங்கியுள்ளார்
ரமணர்.விஷ்ணுவும்,பிரம்மாவும் அடி முடி கண்டு பிடிக்க முடியாத நம்
ஈசனை,திருமுறைகள்,பஞ்சாட்சரம் ஓதி,நம் மனத்திற்குள் கண்டு கொண்டு
தொழுவோம்..''தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும்தேடித் தேட
ஒணாத் தேவனை, என் உளே, தேடிக் கண்டு கொண்டேன்!''என்பது அப்பர்
வாக்கு.அதாவது ,''திருமாலும் பிரம்மனும் கண்டறிய முடியாத சிவபெருமானை
உண்மையான பக்திகொண்டு என் மனத்தில் தேடி கண்டுகொண்டேன்''என்கிறார்
அப்பர்.நாமும் உண்மை பக்தி,அன்பு கொண்டு நம் மனதிற்குள் இருக்கும் ஈசனை
அகங்காரம் சிறிதும் இல்லாமல் கண்டறிந்து அருள்பெறுவோம். மாத சிவராத்திரி
மற்றும் மகா சிவராத்திரியில் இங்கு கிரிவலம் நடக்கிறது.அதிலும்
மஹாசிவராத்திரியின் நாயகன்''லிங்கோத்பவர்''என்னும் திருவண்ணாமலையாரின்
பிறப்பிடமும் திருவண்ணாமலையே...இன்றும் பல ஆயிரம் சித்தர்கள் மகா
சிவராத்திரி நன்னாளில் இங்கு திருவண்ணாமலையை கிரிவலம் வருகிறார்கள்
என்கிறது அகத்தியர் நாடி ஜோதிடம்..மஹாசிவராத்திரி நன்னாளில் உலகில் நாம்
எங்கிருந்தாலும் திருவண்ணாமலையாரை எண்ணி வழிபடுவது சிறப்பு..ஆம்!அவரே
மஹாசிவராத்திரியின் நாயகன் லிங்கோத்பவர் ஆவார்.மஹாசிவராத்திரி நாளில்
அவரவர் ஊரின் அருகில் உள்ள சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத்தையும்,கருவறை
கோஷ்டத்தில் மிளிரும் லிங்கோத்பவர் என்னும் அண்ணாமலையாரையும் எண்ணிவழிபட
வேண்டும்.ஆம்!''நினைக்க முக்திதரும் திருத்தலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக